September 25, 2021

திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பணியின் போது சுருக்கெழுத்தர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஸ்டெனோ‌ எக்சிகியூட்டிவ்வாக (சுருக்கெழுத்தராக) பணியாற்றி வந்தவர் சரஸ்வதி(55).

சென்னையை சேர்ந்த இவர், திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு பிறகு நீதிபதி செல்வசுந்தரி அவர்கள் தீர்ப்புக்கான தகவலை வாசித்த போது, அதனை டைப்பிங் செய்து கொண்டிருந்தார்‌.

அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ‌கீழே விழுந்தார். உடனடியாக அவரை திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். அப்போது அவரை‌ பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்றத்தில் பணியின் போது சுருக்கெழுத்தர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed