September 16, 2021

திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பொதுமக்கள் மறியல் போராட்டம் மற்றும் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் உள்ள அண்ணா நகர் 9வது தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த பல நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை.

இதனால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள், நகராட்சி நிர்வாகம் உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த திருவண்ணாமலை காவல்துறையினர், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில், மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

அதே போல், சாலையை சீரமைக்க கோரி, பாலாஜி நகரில் நாற்று நடும் போராட்டம்…

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட, பாலாஜி நகர் 1வது தெருவில் மழைநீர் தேங்கி நிற்பதால், அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் இன்று காலை தண்ணீர் தேங்கி நிற்கும் சாலையில், பெண்கள் மற்றும் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed