September 25, 2021

சென்னையில் போதை மாத்திரைகள் என கூறி வலி நிவார மாத்திரைகளை அதிக விலைக்கு விற்பனை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

1 min read
Spread the love

சென்னையில் போதை மருந்துகளை ஒழிக்க பெருநகர காவல் துறை தீவிர நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், சென்னை கொடுங்கையூர் பகுதியில் வெளியூரில் இருந்து வந்து போதை மாத்திரைகளை மர்ம நபர் ஒருவர் விற்று வருவதாக கொடுங்கையூர் காவல் ஆய்வாளர்க ஜவகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மூலக்கடை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை, பிடித்து விசாரணை செய்தனர். அவரது கைப்பையை சோதனை செய்த போது வலி நிவாரண மாத்திரைகள் 300 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் அவர் திருச்சி மாத்தூர் பர்மா காலனி பகுதியை சேர்ந்த சுபாஷ் (19) என்பதும், இவர் திருச்சி, கும்பகோணம் பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி அதை வட சென்னையில் உள்ள பலருக்கும் போதை மாத்திரைகள் என்று கூறி விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. 15 மாத்திரைகள் அடங்கிய ஒரு அட்டை 150 ரூபாய்க்கு வாங்கி, அதை ஆயிரம் ரூபாய்க்கு விற்று வந்தது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுபாஷை கைது செய்த காவல் துறை, அவரிடம் இருந்த 300 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

இந்த மாத்திரைகளை யார் யாருக்கு, சுபாஷ் விற்று வந்தார் என்றும், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் எப்படி 300 மாத்திரைகள் வாங்கப்பட்டது என்பது குறித்தும், கொடுங்கையூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வலி நிவாரணியான இந்த மாத்திரைகளை மருந்து கடைகளில் வாங்க மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வாங்க முடியாது என்ற நிலையில், 300 மாத்திரைகள் எங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டன, அவற்றை மருந்து கடைகள் எப்படி விற்பனை செய்தன என்பது குறித்து கொடுங்கையூர் காவல் துறையினர் விரிவான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed