September 26, 2021

திருவண்ணாமலை இரயில் நிலையத்தில், மழையில் நனைந்து வீணாகும் உணவு தானியங்கள்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் கோதுமை, அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்கள் வழங்குவதற்காக, ராஜஸ்தான், பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் உணவு தானியங்கள் திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

அப்படி கொண்டுவரப்படும் தானியங்கள், நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டு, பின்னர் ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படும். ஆனால், தற்போது, நேற்று ஆகஸ்ட் 20 வெள்ளிக்கிழமை இரவு முதல், தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், உணவு தானிய மூட்டைகளை ரயில் தண்டவாளம் அருகே மழையில் நனைந்து விரயமாகும் அவலம் நிகழ்ந்து வருகிறது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed