September 26, 2021

இராஜபாளையம் தொகுதியில் மூன்று அங்கன்வாடி மையங்களை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்…

1 min read
Spread the love

இராஜபாளையம் தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சி புனல்வேலியிலும், சேத்தூர் பேரூராட்சி மேட்டுப்பட்டியிலும், நக்கனேரி ஊராட்சியிலும், இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 3 அங்கன்வாடி மையங்கள் கட்டி முடிக்கபட்டு உள்ளது. அந்த மூன்று மையங்களையும் இன்று காலை (22.08.2021) தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

சேத்தூர் அங்கன்வாடி மையம்

இந் நிகழ்வில் பேசிய எம்.எல். அவர்கள், மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவும், குழந்தையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைவது அங்கன்வாடி மையமாகும்,

நக்கனேரி அங்கன்வாடி மையம்

ஆகவே இம்மையத்தை சிறப்பாக செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக முதல்வர் அவர்கள் மேற்கொள்வார் எனவும், மேலும், அடுத்த வாரத்தில் அங்கன்வாடி பணியாளர்களுடன் கலந்தாய்வு செய்து அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக்கூறினார்.


செட்டியார்பட்டி அங்கன்வாடி மையம்

இந்நிகழ்வில் நகர செயலாளர் ராமமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் அங்கன்வாடி மாவட்ட திட்ட அலுவலர் ராஜன் ஊரக அங்கன்வாடி அலுவலர் பங்கஷம் செயல் அலுவலர்கள் சந்திரகலா அசோக்குமார் பேரூர் கழக செயலாளர்கள் இளங்கோவன் சிங்கப்புலி அண்ணாவி, ஒன்றிய கவுன்சிலர் அனுசுயா கண்ணன், கிளைச்செயலாளர் சௌந்தரராஜன் கழக நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர்கள் ஊர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed