September 26, 2021

பொன்னேரி எம்.எல்.ஏ சந்திரசேகர் கால்பந்து மைதானத்தில் இறங்கி விளையாடி, இளைஞர்களை உற்சாகப்படுத்தினார்…

1 min read
Spread the love

பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்கள் நாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்துஜா நகரில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அளிக்க சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது கால்பந்து விளையாட்டு போட்டியில் விளையாடி கொண்டிருந்த விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவரும் திடலில் இறங்கி விளையாடினார். அப்போது அவர், பெனால்டி கோல் அடித்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் உற்சாகப்படுத்தினார்.

நிகழ்ச்சியின் போது, காங்கிரஸ் கமிட்டியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் கே.எம்.சந்திரசேகர், மீஞ்சூர் தெற்கு வட்டார தலைவர் ஜெலந்தர், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பிரபு, வில்லிவாக்கம் பிரபா வில்சன் ஏழுமலை ஊடகப் பிரிவு மாவட்ட செயலாளர் சிலம்பரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் – சுந்தர்
நிழல் . இன் – 893476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed