September 16, 2021

செங்குன்றத்தில், லயன்ஸ் சங்கங்கள் – பள்ளி சங்கங்கள் இணைந்து கண் பரிசோதனை, ஆதார், கொரோனா தடுப்பூசி, இரத்ததான முகாம்கள் நடத்தபட்டது…

1 min read
Spread the love

சில்ரன்ஸ் பேரடைஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எலைட் பள்ளிக்குழுமம், சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு நர்சரி – பிரைமரி மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகளின் சங்கம், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம், சென்னை சோஷியல் லயன்ஸ் சங்கம், சென்னை தமிழ்சிங்கம் லயன்ஸ் சங்கங்கள் ஆகியோர் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து கண் பரிசோதனை, ஆதார், கொரோனா தடுப்பூசி, இரத்ததான முகாம்களை சில்ரன்ஸ் பேரடைஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் என்.ராஜன் தலைமையில் நடத்தியது.

எலைட் பள்ளிக் குழுமம் முதன்மை நிர்வாக அதிகாரி பால் செபாஸ்டின், சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்கே.வரதராஜன், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கத் தலைவர் கா.ஷண்முக சுந்தரம், மாவட்டத் தலைவர் ஜி.பாலாஜி, சென்னை சோஷியல் லயன்ஸ் சங்கத் தலைவர் நண்பன் எம்.அபுபக்கர், பொருளாளர் இ.முருகானந்தம், ஹேமநாதன், சென்னை தமிழ் சிங்கத் தலைவர் பீலிக்கான், பிஜிஎம் நிர்மலா, ஹேமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

324 ஜெ லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் ஆர்.ஸ்ரீதரன், முதல் நிலை ஆளுநர் பி.வி. ரவீந்திரன், அமைச்சரவை செயலாளர் மாவை மகேந்திரன், மண்டலத் தலைவர் ராஜேஷ், மாவட்டத் தலைவர் டாக்டர் ஆர்.முனுசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண் பரிசோதனை, கொரோனா தடுப்பூசி முகாம், ஆதார் முகாம்களை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் சோழவரம் ஒன்றிய மருத்துவ மேற்பார்வையாளர் ரவிசங்கர், தபால் துறை வெங்கட்ராவ், குழுவினர், அரவிந்த் கண் மருத்துவமனை ராம்ராஜ், மருத்துவ குழுவினர், எழும்பூர் லயன்ஸ் இரத்த வங்கி பொறுப்பாளர் முஜீப், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் ரத்னவேல், பாடியநல்லூர் லயன்ஸ் சங்க இயக்குநர்கள் சரவணன், ராயபுரம் துளசிங்கம், அன்பு, மகேந்திரன் மற்றும் ரமேஷ் பாபு உள்ளிட்டேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இம்முகாம்களில் 328 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டதில், 46 பேர் கண் ஆபரேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டனர். 90 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 50 பேர் ஆதாரில் பெயர், அலைப்பேசி எண், புகைப்பட திருத்தம் செய்து கொண்டனர். இராயபுரத்தில் நடைபெற்ற இரத்ததான முகாமில் 30க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர்.

செய்தியாளர் – நண்பன் எம்.அபுபக்கர்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed