September 16, 2021

திருவண்ணாமலைக்கு காஞ்சிபுரத்தில் இருந்து, குட்காவை கடத்திய 3 பேர் கைது…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் அவர்கள் அளித்த இரகசிய தகவலின் பேரில், செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில் அவர்களின் மேற்பார்வையில், தூசி வட்ட காவல் ஆய்வாளர் அண்ணாதுரை அவர்களின் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் காவலர்கள் அப்துல்லாபுரம் காவல்துறை சோதனைச் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது, அவ்வழியே காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி சந்தேகத்திற்கிடமாக வந்து கொண்டிருந்த (TN25 BM 4975) இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்த போது வாகனத்தில் தடைசெய்யப்பட்ட சுமார் 07 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். போலிசார் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்ததில், குட்காவை கடத்தி வந்தவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் (24 ) விக்னேஷ் (30) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலிசார் கைது செய்தனர்.

மேலும், மனோஜ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காஞ்சிபுரம் விரைந்த தனிப்படையினர் காஞ்சிபுரம், விளக்கடி கோயில் தெருவை சேர்ந்த, செல்வராஜ்(37) என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டதில், வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சுமார் 93 கிலோ குட்கா பொருட்களை கண்டுபிடித்த காவலர்கள், செல்வராஜையும் கைது செய்தனர். கைது செய்யபட்ட மூன்று இடமிருந்தும் மொத்தமாக சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 100 கிலோ குட்காவையும் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த தூசி காவல் நிலைய போலிசார் அவர்கள் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed