September 26, 2021

தச்சூர் முதல் சித்தூர் வரையிலான 6 வழி சாலை திட்டத்தை விவசாயிகளிடம் கருத்து கேட்ட பின் செயல்படுத்த வேண்டி, தமிழக அனைத்து விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை…

1 min read
Spread the love

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு திருவள்ளுர் மாவட்ட கிளை தொடக்க விழா ஊத்துக்கோட்டையில் நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தச்சூர் முதல் சித்தூர் வரையிலான 6 வழிச்சாலை திட்டம் தொடர்பாக விவசாயிகள் உடனான கருத்து கேட்டறிந்தார். விவசாய விளைநிலங்கள் வழியாக 6 வழிச் சாலை திட்டம் கொண்டு செல்வதற்கு அனுமதிக்க கூடாது என ஒட்டு மொத்த விவசாயிகள் ஆதரவு தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர் பாண்டியன், தச்சூர் முதல் சித்தூர் வரையிலான ஆறு வழி சாலை திட்டம் விவசாய விளைநிலங்கள் பாதிக்காத வகையில் மாற்று பாதையில் கொண்டு செல்ல வலியுறுத்தியும், கொசஸ்தலை ஆரணி ஆறுகளில் மணல் கொள்ளைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்தக்கோரியும், விவசாயிகளுக்கு தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வலியுறுத்தியும், செப்டம்பர் 7-ஆம் தேதி ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த திட்டத்தை ஆரம்பக்கட்டத்திலேயே அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் விவசாயிகளும் மீனவர்களும் பாதிக்கக் கூடும் என்பதால் மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும் போதே அதை வலியுறுத்தி இருப்பதால் நிச்சயமாக இந்த திட்டத்தை முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தங்கள் உயிர் உள்ளவரை விவசாய நிலங்களை சாலை திட்டத்திற்கு அனுமதிக்க மாட்டோம்; குறுவை சாகுபடி நேரம் முடிந்துவிட்டதால் நெற்பயிர் காப்பீடு செய்ய முடியாது என்று அரசு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்; செப்டம்பர் 30-ஆம் தேதி வரை காலம் நீட்டிப்பு கொடுத்து விவசாயிகள் நெற்பயிர்கள் காப்பீடு செய்ய பதிவு செய்ய தமிழக அரசு நேரம் ஒதுக்க வேண்டும்.

சம்பா காப்பீட்டுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாகவும் அதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்; 2020-2021 விவசாயிகள் நெல் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ததை விரைந்து நிவாரணம் தொகை தமிழக அரசு வழங்கும் என்று நம்புகிறோம்; எந்த சூழலிலும் மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் உயிரைக் கொடுத்தாலும் விவசாயிகள் அதை தடுத்து நிறுத்துவோம் எனவும் என தெரிவித்தார்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed