September 26, 2021

திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை , திருவண்ணாமலை நகராட்சி , ரயில்வே துறை , காவல்துறை , இணைந்து, விரைந்து செயல்பட மக்கள் எதிர்பார்ப்பு…

1 min read
Spread the love

திருவண்ணாமலை சன்னதி தெரு மற்றும் இராமலிங்கனார் தெரு, கட்டபொம்மன் தெரு சாலை சந்திப்பில் பயணிகள் பேருந்துகள் காலை, மாலை நேரங்களில் வந்து விடுவதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது. கனரக வாகனங்கள் திரும்பும் பொழுது அந்த இடத்தில் சாலை சற்று குறுகளாக உள்ளது. அதனால் கழிவு நீர் கால்வாயில் பேருந்துகள் இறங்கிவிடும் அபாயம் உள்ளது. நான்கு சாலை சந்திப்பு என்பதால் அதிவேகமாய் வரும் வாகனங்கள் அடிக்கடி பொது மக்கள் மீது மோதி விடுகிறது. தினசரி அடிபட்டு விழும் மக்கள் துயரத்தைப் போக்க உடனடியாக திருவண்ணாமலை நகராட்சி வேகத்தடை அமைத்து மக்கள் உயிரைக் காக்க வேண்டும்.

ஆமை வேகத்தில் நடந்து வரும் இரயில்வே மேம்பால பணிகளை இரயில்வே நிர்வாகம் விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனவும், காலை, மாலை வேளைகளில் பேருந்துகளை இப்பகுதிகளில் இயக்காமல் இருந்தால் மக்கள் போக்குவரத்து இடையூறு இல்லாமல் நிம்மதி பயணம் செய்ய ஏதுவாக இருக்கும். திருவண்ணாமலை நகராட்சியும், இரயில்வே துறையும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என திருவண்ணாமலை மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

செய்தியாளர் – மூர்த்தி நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed