September 25, 2021

திருவண்ணாமலையில், மின் பகிர்மான வட்டக்கிளை சார்பிலும், கரும்பு விவசாயிகளும், நியாயவிலை கடை ஊழியர்களும், ஆர்ப்பாட்டம்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு – (COTEE) திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டக்கிளை சார்பில், பயிற்சி காலத்தை மூன்று மாதமாக குறைத்து, சொந்த மாவட்டத்திற்கு ஊர் மாறுதல் உத்தரவு வழங்கக்கோரி, கேங்மேன் தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய கவனர்ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்க்கு, மாநில செயலாளர்
காங்கேயன் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் ஆர்.சிவராஜ் மாநில மண்டல செயலாளர் மு.பாலாஜி வட்ட செயலாளர்
வி.எம். வெங்கடேசன் வட்ட பொருளாளர் மற்றும் தோழர்கள் சிறப்புரையாற்றினர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில், கரும்பு நிலுவைத் தொகை 26 கோடியை வட்டியுடன் வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed