September 16, 2021

பூண்டி ஒன்றியம் ராமநாதபுரம் கிராமத்தில், உலகப் போரின் போது பிரிட்டிஷ்காரர்கள் பயன்படுத்திய இரண்டு பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமாநாதபுரம் பகுதியில் லட்சுமி -வெங்கடரமணா என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பிரிட்டிஷ் கால ஆட்சியில் உலகப்போரின் போது வீசப்பட்ட இரண்டு பீரங்கி குண்டுகளை அப்பகுதியில் இருந்ததைக் விறகு வெட்டிக் கொண்டிருந்த நபர்கள் கண்டெடுத்து காவல்துறைக்கும், வருவாய்த் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு ஊத்துக்கோட்டை ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சென்று பீரங்கி குண்டுகளை மீட்டு நிபுணர்கள் இடம் ஒப்படைத்தனர்.

இந்த பகுதியில் உலகப்போரின் போது பிரிட்டிஷ்காரர்கள் பயிற்சி செய்ததாகவும் அப்போது கிராமத்தில் இருக்கும் நபர்களை வெளியேற்றி பயிற்சி செய்து போது ஒரு சில குண்டுகள் இப்பகுதியில் பறந்து விழுந்து இருக்கலாம் என்றும் அப்பகுதியை சேர்ந்த உலகப் போரின் போது இருந்த பெரியவர் ஒருவர் தகவல் கொடுத்துள்ளார்.
ராமாபுரம் பகுதியில் இதேபோன்று 20க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த கிராமத்தில் 1996ஆம் ஆண்டு ஒரு பீரங்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed