September 16, 2021

பொன்னேரி ரயில் நிலையம் அருகே, ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து, அகில இந்திய SC, ST ரயில்வே தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையம் அருகே அகில இந்திய எஸ்.சி, எஸ்.டி ரயில்வே தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சங்கத்தின் தென்மண்டல பொது செயலாளர் ஞானசேகரன் தலைமையில் மத்திய அரசின் தனியார் மய நடவடிக்கைகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதால் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பதவி உயர்வு, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகியவை பறிபோகும் அபாயம் இருப்பதாக குற்றம் சாட்டினர். மேலும், பயணிகள் கட்டணம் பன்மடங்கு அதிகரித்து பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் சூழல் ஏற்படும் எனவும் புகார் தெரிவித்தனர்.

7-வது ஊதிய குழு பரிந்துரையின் பேரில் ரயில்வே துறையில் குறைந்த பட்ச ஊதியம் 24,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ரயில்வே துறையில் நடைபெற்று வரும் பணிகளை அவுட்சோர்சிங் விடுவதை கண்டித்தும், எஸ்.சி, எஸ்.டி க்கான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed