September 16, 2021

சென்னை மாதவரத்தில் குப்பைகளை சேகரித்து எடுத்துச் சென்ற மாநகராட்சி குப்பை லாரி நடுரோட்டில் தீப்பற்றி எரிந்தது…

1 min read
Spread the love

சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் இவர் சென்னை மாநகராட்சியில் பதிலையே அகற்றி ஏற்றிச் செல்லும் லாரிகள் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், சென்னை மாதவரம் பகுதியில் இருந்து சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை லாரியில் இரவு நேரங்களில் மாதவரத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் குப்பைகளை லாரி மூலம் சேகரித்தார். பின்னர் அந்த குப்பைகளை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கிற்க்கு மாதவரம் நெடுஞ்சாலை வழியாக எடுத்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, லாரியில் திடீரென கரும்புகை வந்ததை பார்த்து பதறி போன சரவணன் லாரியை விட்டு கீழே இறங்கிய போது, லாரி தீப்பிடித்து எரிந்தது. அதில், லாரியில் இருந்த குப்பைகள் மளமளவென எரிந்து அதில், லாரியும் சேர்ந்து எரியத் தொடங்கியது.

மாதவரம் காவல் துறைக்கு அளிக்கப்பட்ட தகவலையடுத்து, மாதவரம் தீயணைப்பு நிலையத்தின் வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்தும் குப்பை லாரி தீயில் முற்றிலும் எரிந்து கருகி நாசமானது. இரவு நேரம் ஏற்பட்ட தீ விபத்தால் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து, மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed