September 16, 2021

திருவண்ணாமலையில், மருத்துவம் படிக்காத நபர், மருந்து கடையின் பின்புறம் ரகசியமாக நடத்திய போலி மருத்துவமனை கண்டுபிடிப்பு…

1 min read
Spread the love

திருவண்ணாமலை அடுத்த அடியண்ணாமலை கிராம பிரதான கிரிவல சாலையில் மெடிக்கல் ஷாப் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த மெடிக்கல் ஷாப்பை நடத்தி வந்த வாலிபர், மருத்துவம் படிக்காமல், மருந்து கடைக்கு உள்ளே சிறிய மருத்துவமனை ஒன்றை அமைத்து சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இது குறித்து வந்த தகவலின் பேரில் சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் எம்.கண்ணகி, முதன்மை மருந்தாளுனர் சீனிவாசன், உதவியாளர் பிரவின்குமார், உள்ளிட்ட மருத்துவ குழுவினர் அடியண்ணாமலை கிராமத்தில் கிரிவல சாலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பாக்யா மருந்து கடைக்கு உள்புறமாக, சிறிய மருத்துவமனை ஏற்படுத்தி, மருத்துவம் படிக்காத வாலிபர் ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார், மருத்துவ குழுவினரை பார்த்ததும் அந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார், அங்கு ஸ்டெதஸ்கோப், ஆக்சிமீட்டர், நெபுளைசர், சிரஞ்சி, மருந்து குப்பிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் உள் நோயாளிகளுக்கான படுக்கை வசதியும் அங்கு காணப்பட்டது, இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed