September 16, 2021

செங்குன்றம் பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டி, மாதவரம் உதவி ஆணையர் மலைச்சாமி அவர்கள் நடவடிக்கை…

1 min read
Spread the love

சென்னையை ஒட்டியுள்ள செங்குன்றம் பகுதியில் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய கனரக வாகனங்களும் சென்னையில் இருந்து ஆந்திராவிற்கும் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் செல்லக்கூடிய கனரக வாகனங்களும் அதிக அளவில் வந்து செல்வதால், செங்குன்றம் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக இருப்பது வழக்கம்.

அதிலும், சமீப காலமாக மீஞ்சூரில் இருந்து வண்டலூருக்கு அமைக்கப்பட்ட வெளிவட்ட சாலைசாலைக்கு செல்லக்கூடிய வாகனங்களும் அதிக அளவில் செங்குன்றம் பகுதியை கடந்து செல்வதால் , அப்பகுதியில் இரவு, பகல் என்று இல்லாமல் எப்போதும் போக்குவரத்து நெரிசலில் தத்தளிக்க கூடிய சூழ்நிலை நிலவுகிறது.

அதனால், செங்குன்றம் பகுதி மக்கள் அதிக அளவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்து சென்னையில் நுழையக்கூடிய வாகனங்களும் பாடியநல்லூர் சிக்னலில் தொடங்கி திருவள்ளூர் கூட்டு சாலை, சோத்துப்பாக்கம் கூட்டு சாலை, வடகரை கூட்டுசாலை போன்ற சாலை சந்திப்புகளில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

இதுபோன்ற போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டி, மாதவரம் உதவி ஆணையர் மலைச்சாமி அவர்கள் செங்குன்றம் பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது வடகரை சிக்னல், சோத்துப்பாக்கம் சிக்னல், போன்ற பகுதிகளிலும் மற்றும் செங்குன்றம் பேருந்து நிலையம் மார்க்கெட் போன்ற பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் களை சீரமைக்க சமூக நல அமைப்புகள் மற்றும் வியாபாரிகளுடன் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும், போக்குவரத்து நெரிசலை கலைப்பதற்கு பொதுமக்களுடன் கருத்துக்களையும் , அவர்களுக்கு சாலை விதி முறைகளை கடைபிடித்து வாகனத்தில் பயணம் செய்ய வேண்டி கேட்டுக் கொண்டார். கூடிய விரைவில் , செங்குன்றம் பேருந்து நிலைய பகுதி, மார்கெட் பகுதி மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் விபத்துகளைத் தவிர்க்கும் விதமாக , போக்குவரத்து நெரிசல் பிரச்சினைகளே இல்லாமல் , வாகன போக்குவரத்து நடைபெற கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

அப்போது, சமூக அமைப்பு (swott) சார்பாக போக்குவரத்து சார்ந்த கோரிக்கை மனுவை அந்த அமைப்பின் செயலாளர் பாரிசெல்வம் மற்றும் ரஃபிக், பிரவீன் ஆகியோர் உதவி ஆணையரிடம் வழங்கினார்கள்.

நன்றி (தகவல்) – ரபீக்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed