September 26, 2021

திருவண்ணாமலையில் , சதுரங்கவேட்டை திரைப்பட பாணியில் , போலி வலம்புரிசங்கை விற்க முயன்ற 8 பேர் கைது…

1 min read
Spread the love

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் 14 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரிவலப்பாதையில் சித்தர்களும் , ஞானிகளும் அமர்ந்து தியானம் செய்ததாக வரலாறு உண்டு, சித்தர்களும் ஞானிகளும் வாழ்ந்த கிரிவல பாதையில் மாத , மாதம் பௌர்ணமி அன்றும் சாதாரண நாட்களிலும் பல ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வது வழக்கம்,

இப்படிப்பட்ட கிரிவலப் பாதையில் அவப்பெயரை உண்டாக்கும் வகையில் அங்கு அமைந்துள்ள சாய்பாபா ஆசிரமத்தில் தங்களது சுயலாபத்திற்காக பல கோடி மதிப்புள்ள போலி வலம்புரி சங்கு வியாபாரம் செய்வதற்காக 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று கூடியுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து.

கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடைக்காடர் சித்தர் ஆசிரமத்தை நடத்தி வரும் கோவிந்தராஜ் என்பவர் தலைமையில் பண்ருட்டியை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் போலி வலம்புரி சங்கை வியாபாரம் செய்வதற்காக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சாய்பாபா ஆசிரமத்திற்கு வந்துள்ளார்,

அப்போது கீழ்பெண்ணாத்தூர் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் உமாசங்கர், ராணிப்பேட்டையை சேர்ந்த சதீஷ், செஞ்சியை சேர்ந்த குப்பன், திருவண்ணாமலை பெரிய தெரு பகுதியை சேர்ந்த அஸ்வத்தாமன், பாண்டிச்சேரியை சேர்ந்த ராஜேஷ், தேனியைச் சேர்ந்த நாகராஜ் ஆகிய எட்டுபேர் கொண்ட இடைத்தரகர்கள் ஒன்று கூடி வியாபாரம் செய்ய முயன்றுள்ளனர்,

அப்போது காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலை நகர காவல் துணை கண்காணிப்பாளர் கிரண்சுருதி அவர்கள் தலைமையில் கிராமிய காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வியாபாரத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்யும் போது பண்ருட்டியை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் மட்டும் தப்பி ஓடியுள்ளார்,

மற்ற ஏழு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து போலி வலம்புரி சங்கு மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

போலி வலம்புரி சங்கில் அரிசி ஈர்ப்பது போன்றும், வலம்புரி சங்கில் பாலை ஊற்றினால் தயிராக மாறுவதைப் போன்றும் செயல் விளக்கம் காட்டி வியாபாரிகளிடம் சங்கை விற்க முயன்றுள்ளனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed