September 16, 2021

துப்பாக்கி
சுடுதல் போட்டியில், வெற்றி பெற்ற திருச்செந்தூர் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், அவர்களை, காவல் துறை தலைவர் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்….

1 min read
Spread the love

தென்மண்டல காவல்துறை இடையிலான துப்பாக்கி சுடுதல் போட்டி தூத்துக்குடி மாவட்ட துப்பாக்கி சுடும் பயிற்சி மையமான வல்லநாடு பயரிங் ரேஞ்சில் இன்று 28.08.2021 நடைபெற்றது. இந்த போட்டியில் தென் மண்டலத்தை சேர்ந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், உதவி கண்காணிப்பாளர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், காவல்துறை துணைத் தலைவர் மற்றும் தலைவர் ஆகியோர்கள் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியில் திருச்செந்தூர் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், அவர்கள் தனிநபர் பிஸ்டல் சுடும் பிரிவில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். ஒட்டு மொத்த சாம்பியன் பிரிவில் இரண்டாவது இடமும் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற காவல் உதவி கண்காணிப்பாளர் அவர்களுக்கு பரிசு கோப்பையும், கேடயமும் வழங்கி காவல் துறை தலைவர் அவர்கள் கௌரவித்தார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed