September 16, 2021

பெரியபாளையம் அருகே , ஆக்கமிப்பை அகற்ற முயன்றதால் , பெண் தற்கொலை முயற்சி, உடல்நலம் குன்றிய மூதாட்டியை வீட்டில் இருந்து ஊழியர்கள் கட்டிலுடன் வெளியேற்றியதால் பரபரப்பு…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆத்துப்பாக்கம் பகுதியில் சாலையோரம் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கூலி வேலை செய்யும் 4குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

ஆண் துணையின்றி பெண்கள் மட்டுமே இந்த வீடுகளில் வசித்து வரும் சாலையை ஆக்கிரமித்து புறம்போக்கு நிலத்தில் உள்ள இந்த வீடுகளை இடித்து அகற்றுவதற்காக இரண்டாவது முறையாக இன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காவல்துறையினருடன் சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த முனியம்மாள் என்ற பெண் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். சாலை விரிவாக்க பணிகளுக்காக தங்களது வீடுகளை இடிக்க அதிகாரிகள் வரவில்லை எனவும், தனிநபர் ஆதாயத்துக்காக அதிகாரிகள் செயல்படுவதாக பெண்கள் புகார் தெரிவித்தனர்.

எனினும் வீடுகளை இடிக்க வேண்டும் என கூறி தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடல்நலம் குன்றிய மூதாட்டியை கட்டிலுடன் வீட்டில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் முறையாக வீட்டில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த குறைந்தபட்சம் ஒரு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து ஒரு வாரம் காலஅவகாசம் வழங்கிய அதிகாரிகள் அதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளுமாறு கூறி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed