September 16, 2021

கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்ற 12ம் வகுப்பு மாணவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்…

1 min read
Spread the love

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு விநாயகபுரத்தில் வசித்து வருபவர் முரளிதரன் (53) இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் பிரனேஷ் (16) இவர் திருநின்றவூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் நேற்று மாலை தனது நண்பர் வேல்சரவணன் என்பவருடன் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கிருஷ்ணா கால்வாயில் தொட்டிக்கலை என்கிற இடத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது கால் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளார். உடனே அவருடன் குளிக்கச் சென்ற அவரது நண்பர் வேல்சரவணன் கூச்சலிட்டு உள்ளார். அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து காப்பாற்றுவதற்குள் பிரனேஷ் தண்ணீரில் அடித்துச் சென்று விட்டார்.

இதுகுறித்து முரளிதரன் செவ்வாப்பேட்டை போலீசுக்கும் திருவூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். போலீசாரும் தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பிரனேஷை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். அதனையடுத்து 24மணி நேரத்திற்கு பிறகு பிரனேஷ் உடலை தீயணைப்பு துறையினர் சடலமாக கைப்பற்றினர் பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மேலும், இச்சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த சம்பவத்தினால் அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

செய்தியாளர் – மேத்யூ
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed