September 16, 2021

தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 35 சவரன் தங்க நகை கொள்ளை…

1 min read
Spread the love

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் உள்ள வள்ளலார் நகரில் வசித்து வருபவர் பாலமுருகன் வயது 35 சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார், இவரது மனைவி தீபா மற்றும் பாலமுருகன் தந்தை சிவானந்தன் ஆகியோர் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தீபா மற்றும் சிவானந்தன் ஆகியோர் போளூர் அடுத்த நம்பேடு கிராமத்தில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்று பின்னர் இன்று காலை வீட்டிற்கு வந்துள்ளார், அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண்சுருதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளையன் மற்றும் காவல்துறையினர் சம்பவம் இடத்திற்கு வந்து கொள்ளை சம்பவம் நடந்த வீட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து இரு அறைகளில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10 சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றுள்ளது தெரிய வந்தது, இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கிழக்கு காவல் நிலைய போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்து மோப்பநாய் உதவியுடன் கொள்ளையனை தேடிவருகின்றனர்.

35 சவரன் தங்க நகை கொள்ளை போனதாக தீபா தெரிவித்துள்ள நிலையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் 10 பவுன் தங்க நகை மட்டுமே வீட்டில் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed