September 26, 2021

சென்னை புழல் பகுதியில் உள்ள ஸ்ரீஸ்ரீராதா கிரிதாரி திருகோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது…

1 min read
Spread the love

கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று உலகெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னையை அடுத்த புழல் பகுதியில் உள்ள ஸ்ரீஸ்ரீராதா கிரிதாரி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர் மற்றும் ராதாராணி விக்ரங்களுக்கு பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், இளநீர், தயிர், நெய், தேன், கற்கண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

முன்னதாக ராதா கிருஷ்ணர் விக்ரங்களுக்கு வெண்ணெய் அடிக்கும் நிகழ்வு நடைபெற்றது. கிருஷ்ணர் மற்றும் ராதாராணி சிலைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, கீர்த்தனைகள், ஆர்த்தி செய்யப்பட்டன.

கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட பகதர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed