September 26, 2021

ராஜபாளையத்தில் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாமை தங்கப்பாண்டியன் எம் எல் ஏ துவக்கி வைத்தார்…

1 min read
Spread the love

இராஜபாளையம் தொகுதியில் குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டப கமிட்டியின் அன்பாதரவுடன் ராஜபாளையம் டவுண் லயன்ஸ் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் 200 வது இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் பொதுநல மருத்துவ முகாம் இன்று (29.08.2021) காலை குமாரசாமி ராஜா அவர்கள் நூற்றாண்டு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இம்முகாமை தனுஷ் எம்.குமார் எம்.பி அவர்களும் , எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் அவர்களும் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் பேசிய எம்.பி அவர்கள் குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டப நிர்வாக கமிட்டியும் லயன்ஸ் கிளப் நிர்வாகிகளும் இணைந்து இது வரை 200 முகாம்கள் நடத்தியது மிகவும் பாராட்டப்பட வேண்டியது எனக் கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ தங்கபாண்டியன் அவர்கள், சட்ட மன்ற கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் அவர்கள் காலை முதல் கூட்டத்தொடர் முடியும் வரை இருந்து சிறப்பாக கூட்டத் தொடரை செயல்படுத்தி வருகிறார் எனவும் இந்தியாவிலே அனைத்து முதலமைச்சர்களுக்கும் முன்னுதாரணமாக தமிழக முதல்வர் அவர்களின் செயல்பாடு உள்ளதாக கூறினார்.

இந்நிகழ்வில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா லயன்ஸ் மாவட்ட முன்னாள் ஆளுநர் சந்தின்ராஜா அரவிந்த் இயக்குநர் கிருஷ்ணதாஸ் மண்டப கமிட்டி தலைவர் ராம்சிங்ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed