September 26, 2021

மீஞ்சூர் அருகே நெய்தவாயல் பகுதியில், வடசென்னை அனல்மின் நிலைய டிரைவர் வெட்டிகொலை …

1 min read
Spread the love

எண்ணூர் சிவகாமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஹேமநாதன் என்னும் பாண்டித்துரை இவர் வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் . இவர் தனது தந்தை பாலன் மற்றும் தாய் கலாவதி ஆகியோருடன் கடந்த 6 ஆண்டுகளாக மீஞ்சூர் அருகே உள்ள நெய்தவாயல் ராஜா தோப்பு பகுதியில் வசித்து வருகிறார் .

பாண்டித்துரை வழக்கம் போல வடசென்னை மின் நிலையத்தில் வேலைக்கு சென்றுவிட்டு இன்று காலை 10 மணி அளவில் நெய்தவாயலில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத சிலர் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளனர். உடனே அவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டி பாண்டித்துரை வயல் வெளியில் இறங்கி ஓடியுள்ளார். அப்போது அவரைத் துரத்திச் சென்று வெட்டி சாய்த்த அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர்.

பின்னர் அவ்வழியாக சென்றவர்கள், ஒருவர் வயல்வெளியில் வெட்டுக்காயங்களுடன் விழுந்து கிடப்பதை மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து, மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெட்டுக் காயங்களுடன் கிடந்த பாண்டிதுரையை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மருத்துவர்கள் சோதித்துப் பார்த்ததில் ஏற்கனவே பாண்டித்துரை இறந்து போனது தெரியவந்தது. இதுகுறித்து மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed