September 26, 2021

ராஜபாளையம் கிருஷ்ணாபுரம் பகுதியில் புதிய மின் மாற்றி இயக்கத்தை தங்கபாண்டியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

1 min read
Spread the love

இராஜபாளையம் தொகுதி கிருஷ்ணாபுரம் ஊர் நிர்வாகிகள் கடந்த மாதம் தங்கப்பாண்டியன் எம்எல்ஏ அவர்களை நேரில் சந்தித்து ஊரில் மின் விநியோகத்தில் உயர் மின்னழுத்த பிரச்சனை இருப்பதாக புகார் கூறியதை அடுத்து மின்சார உதவி பொறியாளர்களுடன் எம்எல்ஏ அவர்கள் கிராமத்திற்கே நேரில் சென்று ஆய்வு செய்தார்.

புதிய மின்மாற்றி (டிரான்ஸ்பாம்) அமைத்தால் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என பொறியாளர்கள் கூறியதையடுத்து எம்.எல்.ஏ அவர்கள் இராஜபாளையம் செயற்பொறியாளர் அவர்களிடம் பேசி முறையிட்டு கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் புதியதாக மின் மாற்றி அமைக்கப்பட்டது.

அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தங்கப்பாண்டியன் எம்எல்ஏ அவர்கள் மின் மாற்றியை இயக்கத்தை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மின்சாரத்துறை செயற்பொறியாளர் திருநாவுகரசு உதவி செயற்பொறியாளர் முத்துலட்சுமி பொறியாளர் குருசாமி ஊர் நிர்வாகிகள் தங்கமாரியப்பன் அம்மையப்பன் முத்தையா நாடார் மனலிங்கராஜா கிளை செயலாளர் லட்சுமணன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed