September 26, 2021

பொன்னேரி தடப்பெரும்பாக்கம் ஸ்ரீபெரியப்பாளைய பவானி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தடப்பெரும்பாக்கம்  கிராமத்தில்  அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியப்பாளையம் பவானி அம்மன்  ஆலயத்தில்  மகா கும்பாபிஷேகம் விழா ஆலய நிர்வாகிகள் குலசேகரன், குணசேகரன்  தலைமையில்  நடை பெற்றது.

நிகழ்ச்சியில் கார்த்திக்ஜி குருக்களின் குழுவினர்கள் பங்கேற்று கோபூஜை, விக்னேஸ்வரபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, வேதபாராயணம்,  திருமுறை பாராயணம், எந்திரஸ்தாபனம்,  முதல் இரண்டு கால யாக பூஜைகள் நடத்தி துவக்கி வைத்தனர்.

அதனை தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்டுள்ள கலசங்களை மேளதாளத்துடன் கோயிலை சுற்றி வளம் வந்த பின்னர் மூலவருக்கு  புனிதநீர்  ஊற்றப்பட்டு  மகா கும்பாபிஷேகம் செய்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மூலவக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் மற்றும் 108 குங்குமம் அர்ச்சனை உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வண்ணமலர்களால் அலங்காரம் செய்து தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் பாபு, துணை தலைவர் சபிதா பாபு, அம்பேத்கர் சங்க தலைவரும் எண்ணூர்  மின்வாரிய பொறியாளர் லோகநாதன்-தீபா,  மற்றும் ஆலய நிர்வாகிகள்  மதன்-சஞ்சனா, குட்டிபாலு, சண்முகம்  உள்ளிட்ட  பக்தர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் ஆலயம் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

செய்தியாளர் சீனிவாசன் 
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed