September 26, 2021

பொன்னேரி ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற கல்லூரி முதல்வர்…

1 min read
Spread the love

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த ஆண்டிலிருந்து கொரோனா தோற்று பரவல் காரணமாக தொடர்ந்து மூடப்பட்டு கிடந்த நிலையில் தற்போது தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க உத்தரவிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களை கல்லூரி முதல்வர் லட்சுமிபதி மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் கல்லூரி வாயிலில் நின்று மாணவ மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து கிருமி நாசினி, உடல் வெப்பம் பரிசோதித்து கல்லூரிக்குள் அனுமதித்த மாணவர்களை கல்லூரி முதல்வர் லட்சுமிபதி மற்றும் பேராசிரியர்கள் வணக்கம் கூறியும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed