September 25, 2021

திருவண்ணாமலையில் , விநாயகர் சதுர்த்தி விழா நடத்த விநாயகரிடமே, அனுமதி கேட்டு மனு கொடுத்து, நூதன ஆர்ப்பாட்டம்…

1 min read
Spread the love

திருவண்ணாமலையில் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விநாயகர் சிலையை நிறுவி விழா கொண்டாட காவல் துறையிடம் அனுமதி கேட்டு திருவண்ணாமலை இந்து முன்னணியினர் முறையிட்டு இருந்தனர். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணத்தால் விநாயகர் சிலை வைத்து விழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதனால் வினாயகர் சதூர்த்தி விழாவை கொண்டாட அனுமதி கேட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன்பு, இந்து முன்னணி சார்பில், அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் அருண்குமார் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, இந்து முன்னணியினர் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த விநாயகர் சிலையிடமே அனுமதி கேட்டு மனு அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed