September 16, 2021

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனத் தலைவர் பூவை மூர்த்தியாரின் 19வது நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனத்தலைவர் பூவை மூர்த்தியாரின் 19வது நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட புரட்சிபாரதம் கட்சியின் சார்பில் பொன்னேரியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் டாக்டர்.ராஜா மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் சிலை அருகே அமைக்கப்பட்ட பந்தலில் மூர்த்தியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தினார். கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் முககவசங்கள் வழங்கப்பட்டது. பொன்னேரி அரசு மருத்துவமனை அருகில் புரட்சி பாரதம் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினை ராஜா திறந்து வைத்தார்.

பின்னர் அங்கு மரச் செடிகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிவமணி, மாவட்ட இளைஞரணி தலைவர் மதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் கோகுல், மாவட்ட மாணவரணி செயலாளர் விக்ரம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இன்பதமிழன், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய தலைவர் ஜெயசீலன், பொன்னேரி நகர தலைவர் ரவி, பொன்னேரி நகர செயலாளர் மணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பேச்சரசன், ஆதித்யா, சேட்டு, மோகன், ராஜி,நரேஷ், சஞ்சய், வசந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன்- 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed