September 16, 2021

பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் மறைந்த புரட்சி பாரத கட்சி நிறுவன தலைவர் பூவை மூர்த்தியார் நினைவு நாளை முன்னிட்டு ஏழைகளுக்கு அன்னதானம் மாவட்ட செயலாளர் வில்சன் வழங்கினார்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் மறைந்த முன்னாள் புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனத் தலைவர் பூவை மூர்த்தியார் அவர்களின் 19 வது நினைவு நாளை முன்னிட்டு ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர்
ப.வில்சன் கலந்து கொண்டு அழிஞ்சிவாக்கம் அரசு பள்ளி அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் மூர்த்தியார் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் ஒன்றியச் செயலாளர் இளையராஜா, ஒன்றிய தலைவர் வடமதுரை சுமன், வழக்கறிஞர் சாந்தகுமார், மற்றும் நாகரத்தினம், அருணாச்சலம்,கோவா, பிரதாப், முருகன் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed