September 26, 2021

உசிலம்பட்டியில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு, கம்ப்யூட்டர் பொருட்களை திருடி வந்த இளைஞர் கைது…

1 min read
Spread the love

மதுரை மாவட்டத்தில் அடங்கிய உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பல இடங்களில் கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் திருடு போய் வந்தன. இந்நிலையில் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து உட்கோட்டங்களிலும் தொடர் திருட்டுகளில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.

அதன்பேரில் உசிலம்பட்டியில் தனிப்படையினர் அப்பகுதியில் தொடர்ந்து நான்கு இடங்களில் கம்ப்யூட்டர் சாதனைகளை திருடிய நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த செந்தில் என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 கம்ப்யூட்டர் மற்றும் சிபியு பாக்ஸ்கள், ஒரு கேமரா போன்றவைகளை கைப்பற்றினர். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட காவலர்கள் அனைவரையும் மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் பாராட்டினர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed