September 16, 2021

கடம்பத்தூரில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், மூன்று ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது …

1 min read
Spread the love

திருவள்ளூரில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 3 ஏழை ஜோடிகளுக்கு 47 வகை சீர் வரிசைகளுடன் 4 லட்சம் ரூபாய் செலவில் இலவச திருமணங்கள் நடைபெற்றன.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியில் திருவள்ளூர் மாவட்ட தளபதி மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் தமிழ்வளவன் -மஞ்சுளா, விஜய்-வெண்பா, பரத்-மகாலட்சுமி ஆகிய
3 ஏழை ஜோடிகளுக்கு 47 வகையான சீர்வரிசைகளுடன் 4 லட்சம் ரூபாய்செலவில் இலவச திருமணம் நடைபெற்றது.

இந்த விழாவில் வழக்கமான திருமணம் நடைபெறுவது போல் மேளதாளம், சண்டி மேளம், ஐயர் வரவழைக்கப்பட்டு மந்திரங்கள் ஓத உறவினர்கள் முன்னிலையில் 3 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட இளைஞர் அணி மற்றும் கடம்பத்தூர் ஒன்றியம் தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி அவர்களின் நல்லாசியுடன் மூன்று ஏழை ஜோடிக்கு 47 சீர் வரிசைகளுடன் இலவசமாக நடத்தப்பட்ட இந்த திருமண விழா விஜய் மக்கள் இயக்க
மாநில பொது செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்களின் வாழ்த்துக்களுடன் மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் எஸ்.விஜயகுமார் அவர்களின் தலைமையில் எம்.டி மணி மற்றும் பா.விமல் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் 3 ஜோடிகளின் உறவினர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 3 திருமண ஏழை ஜோடிகளுக்கு சீர் வரிசை வழங்கப்பட்டது. திருமணைத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed