September 25, 2021

திருவேற்காடு கோலடியில் கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாமை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் துவக்கி வைத்து மாவட்டம் முழுவதும் 50,000-நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தெரிவித்தார்..!

1 min read
Spread the love

திருவள்ளுர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருவேற்காடு நகராட்சி, கோலடி அரசு உயர்நிலை பள்ளியில் மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாமை நடைபெற்றது தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் முகாமை துவக்கி வைத்து, பார்வையிட்டார் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கொரோனா நோய்த்தொற்றை முற்றிலுமாக ஒழிக்க மாபெரும் தடுப்பூசி முகாமினை தமிழகம் முழுவதும் துவக்கி, அதனடிப்படையில் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஆகிய பகுதிகளில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் வாயிலாக, அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

அதனை தொடர்ந்து, திருவள்ளுர் மாவட்டத்தில் மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 12 பொறுப்பு அலுவலர்களைக் கொண்ட 380-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்களை அமைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள்.

அதில் சுமார் 1091 முன்கள பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, இன்று 50,000-ம் நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் மட்டும் 42.50 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல்கட்ட முகாமில் 8,24,808 நபர்களுக்கும், இரண்டாம் கட்ட முகாமில் 2,35,382 நபர்களுக்;கும் என மொத்தம் 10,60,190 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீறிய முயற்சியால் தமிழ்நாடு முழுவதும் 3.37 கோடி நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 23,000-ம் நபர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா நோய்த் தொற்றை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை ஏற்பாடு செய்து, தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற ஒட்டு மொத்த மக்களும் தடுப்பூசி செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 380 முகாம்களில் 50,000-ம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாமினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என கூறினார் .

மேலும் கொரோனா தோற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு கடந்த ஆண்டு இருந்த தடை தற்போது நீடிக்கிறது. இதில் எந்த பாகுபாடும் இல்லை. கடந்த ஆட்சியில் கூட்டனியில் இருந்த பாஜக ஏதும் கேட்காமல் தற்போது மட்டும் கேட்க வேண்டிய அவசியம் என்ன என்றார். இம்முகாமில் திருவள்ளூர் மாவட்டம் ஆட்சி தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவேற்காடு நகர செயலாளர் என்.இ.கே.மூர்த்தி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கே.ஜெ.ரமேஷ், மாநில மாணவர் அணி இணை செயலாளர் சி.ஜெரால்டு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரபு கஜேந்திரன், வர்த்தக அணி அமைப்பாளர் ஏ.ஜெ.பவுல், வட்ட செயலாளர் கே.பி.எஸ்.சுதாகர், நிர்வாகிகள் வழக்கறிஞர் பாலாஜி, பாண்டுரங்கன், என்.ராஜி, பரிசமுத்து, கே.கே.ஆர். கிருஷ்ணகுமார், இளங்கோ, தி.லோ.சதீஷ்குமார், பூவிருந்தவல்லி சுகாதார மாவட்ட துணை இயக்குநர் செந்தில்குமார், திருவேற்காடு நகராட்சி ஆணையர் மு.ரா.வசந்தி, நகராட்சி பொறியாளர் நளினி, சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள் ராஜ், , வட்டார மருத்துவ அலுவலர் லாவண்யா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாம்களில் பல முகாம்களை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்த பின் கூறுகையில் ;

திருவள்ளுர் மாவட்டத்தில் இன்று மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 380 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் ஒரே நாளில் 50,000 பேருக்கு தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயக்கப்பட்ட நிலையில், பொது மக்கள் ஆர்வமாக முகாம்களில் கலந்து கொண்டு 58,141 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.முதல் தவணையின் போது 42% பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், 2-வது தவணையில் 11.2% பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
என தெரிவித்தார்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed