September 26, 2021

வட சென்னை அனல் மின் நிலையத்தில் 49 நாட்கள் பராமரிப்புப் பணிகள் முடிந்து உற்பத்தி தொடங்கிய ஒரே நாளில் பழுது ஏற்பட்டு மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

1-வது நிலையில் உள்ள 2-வது அலகில் கடந்த ஜூலை மாதம் 15 ம் தேதி ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு 49 நாட்கள் பராமரிப்பு பணிகள் முழுவதுமாக முடித்து நேற்று காலையில் இருந்து மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்து மின் உற்பத்தி தொடங்கிய ஒரே நாளில் அந்த அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இன்று மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed