September 26, 2021

கல்பட்டு கிராமத்தில் இருந்த நெல் கொள்முதல் நிலையத்தை வேறு கிராமத்திற்கு மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம்
கல்பட்டு கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த நெல் கொள்முதல் நிலையம் செயல் படுவதற்கு முன்பாகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வந்து இந்த நெல் கொள்முதல் நிலையம் பக்கத்து கிராமமான மாளந்தூருக்கு மாற்றப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

அதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கல்பட்டு நெல் கொள்முதல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த நெல் கொள்முதல் நிலையம் திறந்து ஒருவாரம் ஆன நிலையில் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு என்ன காரணம் எனவும், இந்த நெல் கொள்முதல் நிலையத்தை மாற்றக்கூடாது என்று கூறி நெல் கொள்முதல் நிலையம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளதாகவும் இங்கு அறுவடை செய்யும் நெல் மூட்டைகளை இங்கிருந்து செங்குன்றம் சுமார் 30 கிலோ மீட்டர் தூர அளவில் கொண்டு சென்று விற்பனை செய்து கொண்டு இருந்தோம்

தற்போது முதல்வர் எங்கள் கிராமத்திற்கு என்று நெல் கொள்முதல் நிலையம் வந்திருப்பது மிக மகிழ்ச்சிகரமான செய்தி என்றும், வந்த நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முயற்சிப்பதாகவும் எனவே இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசுக்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள் என்று தெரிவித்தனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed