September 26, 2021

மீஞ்சூரில், சாலையை சீரமைக்காமல், மக்களின் உயிரோடு விளையாடும் நெடுஞ்சாலைத்துறையினர்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டத்திலேயே பொன்னேரி தாலுகாவில் அடங்கிய மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளான அத்திப்பட்டு, அத்திப்பட்டு புது நகர் , மேலூர் , கொண்டகரை , நாப்பாளையம் போன்ற பகுதிகளில் தான் பெரிய பெரிய தொழிற்சாலைகளும் , அனல் மின் நிலையங்களும் , துறைமுகம் மற்றும் ஆயில் நிறுவனங்கள் மட்டுமில்லாமல் அதிக அளவில் கண்டெய்னர் மையங்களும் அமைந்துள்ளன.

அதனால், பொன்னேரி-மீஞ்சூர் வழியாக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து கரிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களும், சென்னை துறைமுகத்திற்கு செல்லக்கூடிய கண்டெனர் லாரிகளும், அனல் மின் நிலையத்திலிருந்து சாம்பல் ஏற்றுக் கொண்டு செல்லக்கூடிய டேங்கர் லாரிகளும் , அதிக அளவில் இந்த சாலையில் செல்கின்றன.

அதனால் பொன்னேரி , மீஞ்சூர் சாலையில் மேலூர் சந்திப்பு வரை சாலைகள் எப்போதும் அதிக நெருக்கடியாக இருப்பது வழக்கம்.
அப்படி அதிக பாரம் ஏற்றிச் செல்லக்கூடிய கனரக வாகனங்களுக்கு இடையே இருசக்கர வாகனங்களில் செல்லக் கூடிய பொது மக்கள் மிகவும் நிதானமாக, உயிரை கையில் பிடித்துக்கொண்டு புகை மாசுகளுக்கு இடையே சாலையில் பயணிப்பதை பல ஆண்டுகளாக பழகி கொண்டனர்.

இருந்தாலும், மேலூர் சந்திப்பில் இருந்து மீஞ்சூர் 400 அடி சாலை சந்திப்பு வரை உள்ள நெடுஞ்சாலைகள் சிறிய அளவில் மழை பெய்யும் சமயங்களில் கூட அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டு சாலையில் நடுவிலேயும், சாலைகளுக்கு இருபுறமும் பெரிய அளவில் சேதம் அடைந்து பெரிய , பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு அதில் மழைநீர் தேங்கி நிற்கின்றன.

அதனால் அந்தச் சாலையில் இரண்டு சக்கர வாகனங்களில் செல்லக் கூடிய மக்கள் மிகவும் அச்சத்தில் அந்த சாலைகளில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவர்கள் எவ்வளவு கவனமாக சென்றாலும் அடிக்கடி விபத்துக்கள் நேரக்கூடிய அபாயகரமான சூழ்நிலை நேரிடுகிறது.

கடந்த ஒரு வார காலத்தில் பலர் மீஞ்சூரில் இருந்து மேலூர் வரை உள்ள சாலையில் ஏற்பட்டு கிடைக்கும் பள்ளங்களில் விழுந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளனர். ஆனாலும் “நெடுஞ்சாலைத்துறையினர் அந்த சாலைகளை சீரமைக்க கூடிய நிலையில் இல்லை ” ஆகவே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்றாக இணைந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆலோசித்து வருகின்றனர்.

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

(நன்றி ; அபுபக்கர் & ஜாக் சரவணன் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed