September 26, 2021

ஊத்துக்கோட்டையில் சாலை பணிகளுக்கு விளைநிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 126கிமீ. தூரத்திற்கு 3200கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 வழிப்பாதை அமைக்க அரசு நிலங்களை கையப்படுத்தி வருகிறது. அதில் குறிப்பாக, ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளான தும்பாக்கம், பருத்திமேனி குப்பம், பேரண்டுர், பனப்பாக்கம், தொளவேடு, காக்கவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைப்பதற்காக நஞ்சை நிலங்களை கையப்படுவத்த திட்டம் மிடபட்டு உள்ளது.

ஆனால், விவசாயிகள் மாற்றுப்பாதையில் விவசாயத்தை அழிக்காமல் அரசின் தரிசு நிலங்கள் வழியாக 6 வழிப்பாதை திட்டத்தை செயல்படுத்தலாம் எனவும் தொடர்ந்து கோரிக்கை முன் வைக்கின்றனர். இன்று ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதானி நிறுவனத்திற்காக தச்சூர் முதல் சித்தூர் வரையிலான 6 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக முப்போகம் விளையும் தங்களது நிலத்தில் சாலை அமைக்க கூடாது எனவும் மாற்றுப்பாதையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் அப்போது வலியுறுத்தப்பட்டது.

கொசஸ்தலை, ஆரணி ஆறுகளின் பாசன வசதி பெறும் நிலங்கள் முற்றிலும் அழிந்து போகும் அபாயம் இருப்பதாக குற்றம் சாட்டினர். மத்திய அரசு தொடர்ந்து விளைநிலங்களை அதானிக்கும், அம்பானிக்கும் தாரை வார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக புகார் தெரிவித்தனர். முப்போகம் விளையும் நிலத்தை சாலைக்கு கொடுத்து விட்டு தங்களது வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்று விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.

தேர்தலுக்கு முன்னதாக அதானி துறைமுகத்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் பறிபோவதாக கூறிய தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தற்போது தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தங்களது நிலங்களில் சாலை அமைக்கும் பணிகளை கைவிட்டு மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்துமாறு அப்போது கேட்டுக்கொண்டனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed