September 26, 2021

திருவண்ணாமலையில், உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி மனு கொடுக்கும் போராட்டம்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உயர்மின் கோபுர த்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலங்களுக்கு, அரசாணைப்படி, சந்தை மதிப்பில் 10 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும், உயர்மின் அழுத்த கோபுரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் சட்டப்படியான இழப்பீடுகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.

அந்த ஆர்பாட்டத்திற்க்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.சுப்பிரமணி தலைமை தாங்கினார், மாவட்ட தலைவர் டி. கே. வெங்கடேசன், சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.சிவகுமார், விவசாய தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் எ.உதயகுமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். வீரபத்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பிரகலநாதன்,

சட்ட ஆலோசகர் எஸ்.அபிராமன், மா.து. தலைவர் பலராமன், சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.பாரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் பி.செல்வன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed