September 16, 2021

மீஞ்சூர் அருகே தனியார் கம்பெனி ஆக்கிரமிப்பு செய்துள்ள அரசு நிலத்தை மீட்டு தரக்கோரி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே வெள்ளிவாயல்சாவடி ஊராட்சியில் அசோக் லேலண்ட் கம்பெனி இயங்கி வருகிறது. அசோக் லேலண்ட் நிறுவனம் விரிவாக்கம் செய்வதற்கு கிராம பொது மக்களிடம் ஒரு ஏக்கர் 25 சென்ட் வண்டிப்பாதை புறம்போக்கு இடத்தை எடுத்துக் கொள்வதாகவும் அதற்கு பதில் வெள்ளிவாயல் சாவடி கிராம பொது மக்களுக்கு வீட்டிற்கு ஒரு வேலை தருவதாகவும் அசோக் லேலண்ட் நிறுவனம் கடந்த 2004ம் ஆண்டு வாக்குறுதி அளித்தது.

ஆனால் 2004 முதல் 2020 ம் வருடம் வரை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கிராம மக்களுக்கான நிரந்தர வேலை வாய்ப்பு கொடுக்க வில்லை. ஆகையால் கிராமத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் 25 சென்ட் வண்டிப்பாதை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள அசோக் லேலண்ட் நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து கிராம நிலத்தை மீட்டுத்தர மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

அதன் பேரில் இதற்கான விசாரணை தொடங்குவதற்கு பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். கோட்டாட்சியரும் வட்டாட்சியர் மூலம் ஞாயிறு பிர்காவுக்கு உட்பட்ட நில சர்வேயர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால் நில சர்வேயராக பணி புரியும் சதானந்தம் என்பவர் அரசு உத்தரவையும் பொருட்படுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த கிராம பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கோட்டாட்சியர் கிராம பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற 15ஆம் தேதி நில அளவை செய்து வண்ணமிட்ட வரைபடத்துடன் கூடிய விரிவான அறிக்கையை தருவதற்கு உத்தரவிட்டார். இதன்பேரில் தற்காலிகமாக ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed