September 26, 2021

பெரியபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாஜகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிளைச் செயலாளர் டார்வின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் திரிபுரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டடு தீ வைக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜகவினரின் அராஜகத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். காவல்துறை துணையுடன் வன்முறை செயல்களில் ஈடுபடும் பாஜகவினருக்கு அப்போது கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஏ.ஜி.கண்ணன், செல்வராஜ், ரவி, அருள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed