September 25, 2021

அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமில் எம்.பி, எம்.எல்.ஏ பங்கேற்பு…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் தலைமை நடைபெற்றது.

துணைத் தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல் ஏற்பாட்டில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் மற்றும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்தனர்.

பின்பு பாராளுமன்ற உறுப்பினர் பேசுகையில் 18 வயது முதல் 45 வயது மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட நபர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

இம்முகாமில் மீஞ்சூர் வட்டார தலைமை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி. ரவி மீஞ்சூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ்.பா.து. தமிழரசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள்‌. கோமதிநாயகம் அஸ்வினி தேவதாஸ் , துளசிபாய்சுந்தரம், பரிமளா கஜேந்திரன், சத்தியமூவேந்தன், சங்கர், தீபன்சக்கரவர்த்தி, விஜயாசிவகுமார்,நிவேதாபிரகாஷ், சுமதி சங்கர் , அருண்ஜோதி,

மற்றும் ஊராட்சி செயலாளர் பொற்கொடி கிராம மக்கள் மற்றும் வட நாட்டு இளைஞர்கள் ஆர்வத்துடன் முகாமில் கலந்து கொண்டு தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டனர்.

செய்தியாளர் – சுந்தர்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed