September 25, 2021

அனுப்பம்பட்டு ஊராட்சியில் நடந்த தடுப்பூசி முகாமை ஒன்றியக் குழு தலைவர் அத்திபட்டு ரவி பார்வையிட்டார்…

1 min read
Spread the love

மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனுப்பம்பட்டு ஊராட்சியில் கொரோனா பரவலை தடுக்க வேண்டி பல கட்டங்களாக மருத்துவ முகாம்களும், தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டது. ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கியும், ஒலிபெருக்கி மூலமும் தொடர்ந்து கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதல்வரின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம், அனுப்பம்பட்டு ஊராட்சியிலும் நடைபெற்றது. முகாம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி அம்மாள் தலைமையில் நடைபெற்றது. முகாமை ஒன்றிய குழுத்தலைவர் அத்திப்பட்டு ரவி பார்வையிட்டார்.

அப்போது அவருடன் அனுப்பம்பட்டு கூட்டுறவு சங்க தலைவர் உமாமகேஸ்வரன் , நந்தியம்பக்கம் கவுன்சிலர் கதிரவன், சசிபாபு, ராமநாதன் ஊராட்சி உதவியாளர் செந்தில் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed