September 16, 2021

எல்லாபுரம் ஒன்றியம் திரு தண்டலம் ஊராட்சியில், கும்மிடிபூண்டி எம்.எல்.ஏ, டி.ஜே கோவிந்தராஜன் மரக்கன்றுகளை நட்டார்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் திருக்கண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் மதன் என்கின்ற சத்யராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராசன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து சிறப்புரை ஆற்றினார். பின்னர் திருக்கண்டலம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே சேதமடைந்த தடுப்பணை மீண்டும் தொடங்கப்பட்டு பணிகள் நிறைவடைந்த தடுப்பணையை பணிகளை பார்வையிட்டார் .

இந்நிகழ்ச்சியில் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்திவேலு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின், ஒன்றியக்குழு உறுப்பினர் ரவி, ஊராட்சி மன்ற துணை தலைவர் லிங்கா துறை, திருக்கண்டலம் தி.மு.க. ஊராட்சி கழகச் செயலாளர் தியாகராஜன் தனியார் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கல்யாணி ஆனந்தன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed