October 27, 2021

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருத்தலத்தில் பூத நாராயணனுக்கு புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை அன்று மகா அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டன.

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாட வீதியில் குபேர மூலையில் வீற்றிருக்கும் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூத நாராயணனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றது .
பகவான் கிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ணரை அழிக்க கம்சன் பூதகி என்ற அரக்கியை பகவான் கிருஷ்ணர் இடம் அனுப்பி உள்ளான் இந்நிலையில் கிருஷ்ணன் பூதகியை வதம் செய்ததால் இந்த பெருமான் பூத நாராயணன் என்று அழைக்கப்படுகிறார்.

பூத நாராயணர் சன்னதியில் இருக்கும் மூலவர் குபேரன் போல் இருப்பதால் வாரந்தோறும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை அன்று பூத நாராயணனை வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை ஆலயம் திறக்கப்பட்டு பூத நாராயணனுக்கு சந்தனாதி தைலம் ,மஞ்சள் ,பச்சரிசி, மாவு ,பால் ,இளநீர் எலுமிச்சைச்சாறு, சொர்ண அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சபரி பட்டாச்சாரியார் அவர்களால் வேத மந்திரங்கள் முழங்க பெருமாள் பாசுரங்கள் பாட பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது .

கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் சன்னதி உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில் பூத நாராயணனின் அபிஷேகத்தையும் தீப ஆராதனையையும் கோவில் வெளியே இருந்து பக்தர்கள் பக்தியுடன் தரிசித்து சென்றார்கள்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed