October 27, 2021

திருவண்ணாமலை உழவர் சந்தை பகுதியை, சுகாதாரமாக வைத்திருக்க நகராட்சி நிர்வாகத்திற்கு, பொதுமக்கள் கோரிக்கை…

1 min read
Spread the love

த‌மிழ‌க‌ முன்னாள் முத‌ல்வ‌ர் டாக்ட‌ர் க‌லைஞரின் க‌ன‌வு திட்ட‌மான‌ உழவர் சந்தை திட்டம், துவக்கப்பட்டதில் இருந்து, பொது மக்களுக்கு மிகவும் பேருதவியாக இருந்தது. அதனால் ‌விவசாயிகளும் நேரிடையாக‌ ப‌ய‌ன‌டைந்தனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த திருவ‌ண்ணாம‌லை உழ‌வ‌ர் ச‌ந்தை தற்போது திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், உழவர் சந்தை நுழைவு வாயில் பகுதியில் க‌ழிவு நீர், ம‌னித‌ க‌ழிவுகளுடன் கலந்து தேங்கி நி‌ற்பதால், அங்குவரும் பொது மக்கள், பாதிக்கப்படுகின்றனர். ‌

திருவ‌ண்ணாம‌லை நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்க‌ள் ப‌யன்படுத்தும் உழ‌வ‌ர் ச‌ந்தை வ‌ழியை சுத்த‌ப்ப‌டுத்த,‌ நகர நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க‌ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed