October 27, 2021

திருவாரூர் அருகே பின்னவாசலில், நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் நேரில் ஆய்வு…

1 min read
Spread the love

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டத்திற்க்கு உட்பட்ட பின்னவாசல், பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரிகிருஷ்ணன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது
மாவட்ட ஆட்சி தலைவர் அவர் தெரிவித்ததாவது; உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்றில் இருந்து தமிழக மக்களை காப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் இந்நோய் தொற்றில் இருந்து தங்களை காத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி ஒன்று தான் சிறந்தது என்பதனை எடுத்துரைத்து தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை தமிழக அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது .
அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம், நிலையான தடுப்பூசி முகாம், மருத்துவமனைகள் என பல்வேறு வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை எளிதாக்கி, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இதுவரை முதற்கட்ட கொரோனா தடுப்பூசியாக 5,17,950 நபர்களுக்கும், இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசியாக 1,11,179 நபர்கள் என 6,29,129 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினம் 29,800 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காக நிர்ணயித்து 319 இடங்களில் மாபெரும் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.

மேலும் தமிழக அரசு கோவிட்-19 முடிவுகளை பதிவிறக்கம் செய்ய https://www.tncovid19results.com/
என்ற இணையதளத்தை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இதன் மூலம் தங்களது RT-PCR பரிசோதனை முடிவுகளை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் , மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் – நா.மணிவண்ணன்
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed