October 27, 2021

திருவண்ணாமலையில், தவறான சிகிச்சையால் பெண் பாதிப்பு, அரசு மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகை …

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் வரகூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜகுமாரி – முருகன் தம்பதியினர். இதில் ராஜகுமாரி(35) என்பவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருவண்ணாமலை நகரில் உள்ள ராஜ் மருத்துவமனையில் செப்டம்பர் 21ம் தேதி ராஜகுமாரியை சிகிச்சைக்காக அனுமதித்தனர்

அங்கு ராஜகுமாரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கர்பப்பையில் கட்டி உள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து, சில நிமிடங்களில் அங்கிருந்த ஆம்புலன்சில் ராஜகுமாரியை ஏற்றி, அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்ததாகவும், தற்போது அரசு மருத்துவமனையில் ராஜகுமாரி, கோமாவில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுவதாகவும் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

தவறான சிகிச்சையால் ராஜகுமாரி பாதிக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்து, உறவினர்கள் இன்று காலை அரசு மருத்துவமனை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மாலை 5 மணிக்கு பே.கோபுர தெருவில் உள்ள ராஜ் மருத்துவமனை முன்பு, ராஜகுமாரியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed