October 27, 2021

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுகவினர் மாவட்டம் முழுவதும் மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்….

1 min read
Spread the love

தமிழக முதல்வரும், திமுக கட்சியின் தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் படி தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திட திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்.

அதன்படி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் முழுவதும் திமுகவினர் தங்கள் வீடுகள் மீது கருப்புக் கொடிகளை ஏற்றியும் வீட்டின் முன்பாக கருப்புக்கொடியை கையிலேந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்
டி.ஜே.எஸ் கோவிந்தராஜன் அவர்கள் தனது
வீட்டின் முன்பு ஜனநாயக விரோதியாக செயல்படும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, திமுக நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டம் செய்தார்.

ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல், கேஸ் உயர்வை கண்டித்தும், மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரியும் ,ஒன்றிய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்களிட்டனர். ஆர்ப்பாட்டத்தில்
மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
வெற்றி (எ)ராஜேஷ், டி.ஜே.எஸ் கல்வி குழுமத்தின் இயக்குனர் டி.ஜே.எஸ்.தினேஷ்,
மாதர்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், கழக நிர்வாகிகள் தயாளன், தனகோட்டி, எழிலரசன் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

வல்லூரில் உள்ள மீஞ்சூர் தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் தலைமையில் திமுக கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், கேஸ் விலையை தொடர்ந்து உயர்த்துவது, பொது நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதையும், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ள ஒன்றிய அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் காணியம்பாக்கம் தன்சிங் , தடப்பெரும்பாக்கம் ராஜா, மின்வாரிய தொழிலாளர்கள் சங்க நிர்வாகி ராமமூர்த்தி மோகன், தமிழரசு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பொன்னேரியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் சுந்தரம் அவர் வீட்டின் மீது கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவருடன் கைகளில் கருப்பு கொடி எந்தி திமுகவினர் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசினுடைய மக்கள் விரோத செயல்களான டீசல், பெட்ரோல், கேஸ் விலை உயர்வு, விவசாயிகள் விரும்பாத வேளாண் சட்டங்களை விவசாயிகளின் மீது திணிப்பது, உட்பட ஒன்றிய அரசினுடைய பல மக்கள் விரோத செயல்களை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தடப்பெரும்பாக்கம் ராஜா, நக்கீரன் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

அத்திபட்டு பகுதியில் அத்திபட்டு ஊராட்சி மன்ற துணை தலைவர் எம்.டி.ஜி கதிர்வேலு தலைமையில் திமுகவினர் ஒன்றிய அரசை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் – சுந்தர்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed