October 27, 2021

மதுரை திருமங்கலம் பகுதியில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை அபகரித்துக் கொண்டு தப்பிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்…

1 min read
Spread the love

மதுரை திருமங்கலம் பகுதியிலுள்ள ஒரு ஏ.டி.எமில் முதியவர் ஒருவர் பணம் எடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது அங்கே நின்றிருந்த ஒரு இளைஞர் அவரிடம் பணம் எடுத்து தருவதாக கூறி அவருடைய ஏடிஎம் கார்டை நாசுக்காக பேசி வாங்கி கொண்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது முதியவர் கூச்சல் போட்டதால் அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஏடிஎம் கார்டுடன் அங்கிருந்து ஓட முயன்ற வாலிபரை விரட்டிப் பிடித்து போலிசில் ஒப்படைத்தனர்.

போலீஸார் அந்த வாலிபரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில் அவர் காஞ்சிபுரம் இலட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த டில்லிபாபு என்பது தெரியவந்தது. மேலும், அவர் இதே போல் தமிழகம் முழுவதும் 18-க்கும் மேற்பட்ட ஊர்களில் இதேபோல முதியவர்கள் பெண்கள் என பலரிடம் ஏடிஎம் கார்டை நைசாக பேசி அவ கரித்துக் கொண்டு தலைமறைவாகி பின்னர் அந்த ஏடிஎம் கார்டில் இருந்து பணத்தை திருடி வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இது குறித்து மேலும் திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்களை ஏமாற்றி ஏடிஎம்மில் திருடிய ஊர்களின் பட்டியல் விவரம்

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed