October 27, 2021

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மாவட்ட சிறப்பு குழுவினர் வாகன சோதனையில், புகையிலை பொருட்களை கடத்திய மூவர் கைது , ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல்…

1 min read
Spread the love

மதுரை அருகே உள்ள அலங்காநல்லூர் பகுதியில் போலீசார் தொடர்ந்து வாகன பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவ்வழியாகச் சென்ற ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் அரசு தடை விதித்துள்ள குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் மறைத்து கொண்டு செல்வது தெரியவந்தது. விசாரணையில் அந்த காரில் வந்த நபர்கள் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை மறைத்து கொண்டு போய் காரின் மூலமாக மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அதனடிப்படையில் காரில் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த மலைப்பட்டி,
வாவிடைமருதூரை சேர்ந்த நேசமணி, மங்களக்குடி விளக்கை சேர்த்த வீரப்பன்,
அலங்காநல்லூரை சேர்ந்த பெரியதம்பி, ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த சுமார் 240 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும்
ரூ 1,07,600 ரொக்கத்தையும் அவர்கள் குட்கா பொருட்களை கடத்த பயன்படுத்திய
ஸ்விஃப்ட் கார் (TN 77 0311) மேலும் அவர்கள் பயன்படுத்திய ஹீரோ ஹோண்டா பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed